தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டம் என்று மக்களை வெயிலில் காக்க வைத்தவர் பொன். ராதாகிருஷ்ணன் - வசந்தகுமார் குற்றச்சாட்டு - vasanthakumar

கன்னியாகுமரி: போராட்டம் என்ற பெயரில் மக்களை வெயிலிலும், மழையிலும் அதிகம் காக்க வைத்தவர் பொன். ராதாகிருஷ்ணன் என காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

வசந்தகுமார்

By

Published : Mar 30, 2019, 9:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் திறந்து வைத்தார். இதில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவுது,

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் வெறும் கல்லை மட்டும் நட்டுவிட்டு துறைமுகம் வந்ததாக கூறுகிறார். மேலும் போராட்டம் என்ற பெயரில் ஏராளமான மக்களை வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்தவர். மக்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை பேசியதில்லை, மறாக அதிகம் பொய்தான் கூறியுள்ளார்.

போராட்டம் என்று மக்களை வெயிலில் காக்க வைத்தவர் பொன். ராதாகிருஷ்ணன்- வசந்தகுமார்


என்னை வெளிநாட்டுப் பறவை எனக் கூறும் அவர் பாஜ சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசையை பார்த்து அவ்வாறு கூறுவரா.
இவ்வாறு அவர் கூறினார்.


ABOUT THE AUTHOR

...view details