கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை எதிர்த்து, பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரை தொடங்கியது முதல் இரு வேட்பாளர்களும், நேருக்கு நேர் தனிப்பட்ட வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை நிறைவடைய இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில், வசந்தகுமாரின் மைத்துனர் காமராஜ், நாகர்கோவிலில் தங்கியிருந்த தனியார் ஓட்டலுக்கு (சஹானா காஸ்டில்) வருமானவரித் துறையினர் திடீரெனசென்றனர். அங்கு காமராஜ் தங்கியிருந்த அறையினுள் சென்ற வருமானவரித் துறையினர் நான்கு பேர் சுமார் அரை மணி நேரம் வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், வசந்தகுமார் மைத்துனர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆனந்த் சீனிவாசன், "கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் உறவினர்களை வருமானவரித் துறை மிரட்டுகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வருமானவரித் துறை, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார். பொன்.ராதாகிருஷ்ணன், மோடியின் ஒரு கைப்பாவை. பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, உள்பட எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுவதில்லை ஏன்?