தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தமிழ்நாடு மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்யும் இலங்கை அரசையும், மௌனம் காக்கும் இந்திய அரசையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 23, 2021, 12:56 PM IST

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்களை படுகொலை செய்வது, சித்ரவதை செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சித்ரவதை செய்து கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.

அதனை தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு 10 ரூபாய் கோடி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்றார்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details