இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "மேகதாதுவில் அணை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது காவிரி ஆணையத்திற்கு எதிரானது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்துக்கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது.
அணு உலைக் கழிவு ஆபத்தானது! எச்சரிக்கும் நல்லகண்ணு - nallakanu
கன்னியாகுமரி: கூடங்குளம் அணு உலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
நல்லகண்ணு
ஆணையம் என்று வந்த பிறகு கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் என கூறுவது தவறு. இதற்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கூடங்குளம் அணு உலைக் கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இதனைக் கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்து சொல்லக்கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுக்கிறது; இது தவறு" கூறினார்.