கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (நவ.03) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விசைப்படகுகளில் உள்ள ஜி.பி.எஸ். கருவிகளின் செயல்பாடுகள், துறைமுக அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.
சின்ன முட்டம் துறைமுகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு! - சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு
கன்னியாகுமரி: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் அரவிந்த்
அதையடுத்து கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளை சாலையில் உள்ள இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர் அரவிந்த், அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சுசீலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:மீன் பிடி தடைக்காலம் குறைப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி