கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சியில் துப்புரவு, பிளம்பிங் உள்ளிட்ட பணிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றார்.
இவர்கள் பணியில் சேர்ந்தபோது உறுதியளித்து கூறியபடி ஊதியம் வழங்கப்படுவதில்லை. 13 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த பணியாளராக பணி செய்யும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கையுறை மற்றும் முகக் கவசம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சி சார்பில் ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.