தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதியை வரவேற்க வந்த தொண்டர்கள் இடையே வாக்குவாதம் - கன்னியாகுமரியில் பேசிய உதயநிதி

கன்னியாகுமரி வந்த திமுக இளைஞரணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 21, 2022, 6:55 PM IST

கன்னியாகுமரி :முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அதற்காக இன்று மதியம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்த உதயநிதிக்கு திமுக சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் உதயநிதி ஓய்வெடுக்கச் சென்ற நிலையில் அவரைக் காண அங்கு கூடியிருந்த ஏராளமான இளைஞர்களை உள்ளே அனுமதிக்காமல் கதவினை பூட்டி விட்டனர்.

பின்னர் ஒரு சிலரை மட்டும் அனுமதித்ததாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு
உள்ளே வரும்போது திமுகவின் தொண்டர்கள் இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தொண்டர்கள் இடையே மோதல்

தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர் மீதும் இந்த நிகழ்வை வீடியோ எடுத்த ஒரு சிலர் மீதும் சில நபர்கள் தாக்குதல் நடத்த முன்வந்து, செல்போனை பிடுங்கி உடைத்தனர். பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ராஜீவ் காந்தி கொலை வழக்கு... நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை... காங்கிரஸ் மறு சீராய்வு மனு...

ABOUT THE AUTHOR

...view details