தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் பாஜக-திமுக கட்சியினர் இடையே மோதல்?

கன்னியாகுமரி: வாக்குப்பதிவு இந்திரங்களை சீல்வைக்கும்போது பாஜக, திமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

பாஜக, திமுக கட்சியினர் இடையே மோதல்?
பாஜக, திமுக கட்சியினர் இடையே மோதல்?

By

Published : Apr 7, 2021, 6:46 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் உள்ள பெண்கள் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சீல் வைக்கும்போது, பாஜக நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பவரைத் திமுக நிர்வாகி ராஜ் என்பவர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மத்திய முன்னாள்அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி ஆகியோர் சம்பவயிடத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் திமுக நிர்வாகியைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு திமுகவினரும் கோஷங்களை எழுப்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

பாஜக, திமுக கட்சியினர் இடையே மோதல்?

மேலும் திமுக நிர்வாகியைக் கைதுசெய்யாமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை விடமாட்டோம் எனத் தெரிவித்தும் பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் 77.91 விழுக்காடு வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details