கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இக்கொண்டாட்டத்தில், குருத்தோலை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு ஜெபித்தவாறே ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்தவகையில் இந்த வருடத்திற்கான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுமக்கள் யாரும் வரவில்லை. ஆலயத்திலுள்ள குருமார்கள் மட்டுமே ஜெபத்தில் ஈடுபட்டனர்.