கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர்கள் பீர் முகம்மது (24) - ஷிஃபானா(22) தம்பதி. இந்த நிலையில் ஷிஃபானாவுக்கு ஏற்பட்ட பிரசவ வலி காரணமாக நெய்யூர் சி.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது பிரசவ மருத்துவர் இல்லாமல் பயிற்சி இல்லாத மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது.