கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வள்ளவிளை, மிடாலம், மார்த்தாண்டம்துறை ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சுமார் 100 மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீனவர்களின் உயிர்களுக்கு மத்திய அரசு தான் காரணம்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்.