கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள என்ஜிஓ காலனி பகுதியில் மன வளர்ச்சி குன்றிய நிலையில், முதியவர் ஒருவர் சாலையோரமாக வசித்து வந்தார். சாலையில் கிடக்கும் பொருள்களை எடுத்து சிறு குழந்தை போல, காலால் எட்டி உதைத்தும், கைகளில் தூக்கி எறிந்தும் விளையாடி வருவது இவரது வழக்கம்.
இதேபோல, நேற்று (ஆக. 20) அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகாமையில் ஏதோ ஒரு பொருளை காலால் எட்டி உதைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் ஒரு புறம் இருந்து மறுபுறம் வந்துவிட்டு அவர் திரும்பும்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த மினிப்பேருந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.