தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2020, 5:12 PM IST

ETV Bharat / state

பெண்களை ஏமாற்றிய வழக்கு: கன்னியாகுமரி காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்!

கன்னியாகுமரியில் பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி அலுவலர்கள் இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி காசி வழக்கு
கன்னியாகுமரி காசி வழக்கு

கன்னியாகுமரி: பெண்களை ஏமாற்றி படம் எடுத்து மிரட்டல் விடுத்த, வெளிநாட்டிலுள்ள காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி அலுவலர்கள் இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி (26), அவரது நண்பர்களான டைசன் ஜீனோ (19), தினேஷ் ஆகியோர்கள் இளம்பெண்களிடம் சமூக வலைதளங்களில் பழகி, அவர்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சிபிசிஐடி தற்போது விசாரணையில் வேகம் எடுத்துள்ளது. காசி மீது கோட்டார், நேசமணி நகர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இளம்பெண்கள் பலர் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் இரண்டு வழக்குகளும், பிற காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளிலும் தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒன்றிற்கு சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது.

இதற்கான இறுதிகட்ட வேலைகளில் டிஎஸ்பி அணில் குமார் தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த வழக்கில் காசியின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிசிஐடி முடுக்கி விட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக, அனைத்து விமான நிலையங்களுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வாரங்களில் அவர் கைதாகவில்லை எனில், இன்டர்போல் காவல் உதவியை நாட சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய காசி... ஐந்து நாள்கள் காவலில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details