கடையாலுமூடு பகுதியில் அண்மையில் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேர்கிளம்பி பகுதியில் ஜெகிதாஸ் என்ற ஹோமியோபதி மருத்துவர் அலோபதி சிகிச்சை அளிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ, கொற்றிகோடு காவல் நிலையத்தில் ஜெகிதாஸ் மீது புகாரளித்தார்.
படித்தது ஹோமியோ; பார்ப்பது அலோபதி சிகிச்சை - கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: அலோபதி சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
doctor
புகாரின்பேரில், ஜெகிதாஸ் மீது கொற்றிகோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'தேர்தல் ஆணையத்திற்கே சவால்' - வீடியோவால் வில்லங்கம்