தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரை விமர்சித்த திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு! - கரோனா வைரஸ்

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரதமரை விமர்சித்த திமுக  எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!
பிரதமரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

By

Published : May 15, 2020, 3:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ், பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் செய்துவந்தார்.

குறிப்பாக, மத்திய அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பிரதமர் மோடி குறித்த கேலி சித்திரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “கரோனாவும் மோடியும் இரண்டுமே திரும்பிச் செல்வதில்லை. மக்களாகிய நாம் தான் அவர்களை விரட்ட வேண்டும்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜின் பேஸ்புக் பதிவு

இதைத் தொடர்ந்து பாஜக குமரி மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான விசு என்பவர் கோட்டார் காவல் நிலையத்தில் மனோ தங்கராஜ் மீது புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மனோ தங்கராஜ் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமரை விமர்சித்த திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இதேபோல் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் மனோ தங்கராஜ் மீது பாஜகவினர் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட திமுக எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details