தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் - குடியுரிமை திருத்தச் சட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

CAA Protest, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்
CAA Protest, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

By

Published : Jan 22, 2020, 8:45 AM IST

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்ட அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் காவஸ்தலம் பகுதியிலிருந்து அரச மூடு சந்திப்பு வரை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அரச மூடு சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே போன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அறவழிப்போராட்டமாக காலை முதல் நோன்பு இருந்து இஸ்லாமியர்கள் மாலையில் அதனை முடித்துக்கொண்டனர். இது தவிர காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:‘வருத்தம் தெரிவித்திருந்தால் ரஜினியின் மதிப்பு கூடியிருக்கும்’ - வைகோ

ABOUT THE AUTHOR

...view details