நாகர்கோவிலில் கரோனாவால் ஓட்டுநர் உயிரிழப்பு! - Driver died by corona affected
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஓட்டுநர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் முதலமைச்சர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருந்த 4 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. 57 வயதான அவர் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று (அக். 113) சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நாகர்கோவில் வருவதாக இருந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருந்த காவல் துறையினருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.