தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து தகராறு - புதைக்கப்பட்ட அண்ணன் உடலை  தோண்டிய தம்பி - சடலத்தை தோண்டு எடுத்த தம்பி

கன்னியாகுமரியில் சொத்து விவகாரம் காரணமாக 18 நாள்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அண்ணனின் உடலை தோண்டி எடுத்த தம்பி அதை வேறு இடத்தில் புதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அண்ணனின் சடலத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்த தம்பி
அண்ணனின் சடலத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்த தம்பி

By

Published : Jun 5, 2022, 11:52 AM IST

கன்னியாகுமரி:மார்த்தாண்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்தவர்கள் ஜெஸ்டஸ் மற்றும் கிறிஸ்டோபர். இருவரும் சகோதரர்கள். பெற்றோர் உயிரிழந்த நிலையில் சொத்துக்களை பிரித்துள்ளனர். அப்போது, குடும்பத்தில் உயிரிழப்பவர்களது உடலை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட கல்லறைத் தோட்டப் பகுதி கிறிஸ்டோபருக்கு பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெஸ்டஸ் கடந்த 12ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் கல்லறைத் தோட்டத்தில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்டோபர், ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்தார்.

அண்ணனின் சடலத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்த தம்பி

18 நாள்கள் கழித்து சொந்த தம்பியே அண்ணனின் உடலை தோண்டி வேறோரு இடத்தில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது சம்பந்தமாக ஜெஸ்டஸின் மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சீட்டு பணத்தை கொடுக்காத மகளிர் காவலர்.. 12 வயது சிறுவனிடம் அத்துமீறிய காவலரின் கணவர்!

ABOUT THE AUTHOR

...view details