பாலம் தரமானதுதானா? அஞ்சும் வேம்பனூர் மக்கள் - kanyakumari
கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகே வேம்பனூர் பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் முறைகேடாக தரமற்ற வகையில் நடைபெற்று வருவதாக பொது மக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
Bridge work issues
நாகர்கோவில் அருகே மேல சங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட வேம்பனூர் பகுதியிலுள்ள குளத்தின் தண்ணீரை பாசனத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய், பாலம் சிறிய அளவில் இருந்துள்ளது.
இக்கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஒரு கோடி ரூபாய் செலவில் பாலத்தை கட்டத்தொடங்கியது. ஆனால் பாலம் தரமற்ற முறையில் கட்டுப்படுவதாக அப்பகுதி மக்கள் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். தரமற்ற வகையில் கட்டிவரும் இப்பாலம் மழைநேரங்களில் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.