தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன் - கேரளாவில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலை

கன்னியாகுமரி: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை சோடா பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த காதலன் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதலியை கொலை செய்த காதலன்
காதலியை கொலை செய்த காதலன்

By

Published : Jan 8, 2020, 4:23 PM IST

Updated : Jan 8, 2020, 4:48 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியிலுள்ள காரகோணம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அஜித்குமாரின் மகள் ஆஷிகா(19). இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் ஃபேசன் டெக்னாலஜி படித்துவந்தார்.

இவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனு (21) என்ற இளைஞரும் பள்ளி படிக்கும்போதிலிருந்தே காதலித்துவந்துள்ளனர். அனு பல முறை ஆஷிகாவின் தந்தையிடம் திருமணம் செய்துவைக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ஆஷிகாவின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.

காதலியைக் கொலை செய்த காதலன்

ஆஷிகாவும் அனுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அனு ஆஷிகாவின் வீட்டிற்குள் புகுந்து சோடா பாட்டிலால் அவரது கழுத்தை அறுத்துக் கொலைசெய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள மாநில வெள்ளறடை காவல் துறையினர், இருவரது உடலையும் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் பெண் தற்கொலை

Last Updated : Jan 8, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details