இலங்கையில் தீவிரவாதிகளால் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து, அந்நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
அதன் காரணமாக இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ரயில்வே நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் ரயில்நிலையத்தில் தீவர கண்காணிப்பு இந்தியா முழுவதிலுமிருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குப் பின்னரே ரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மேலும், வெளியூர்களிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன.