கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாஜக மீனவரணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டார். கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியாதவது, நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக மகத்தான வெற்றி பெறும்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 தொகுதிகளை கைப்பற்றும்- பொன். ராதாகிருஷ்ணன் - 300 தொகுதி
கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் உள்ள 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் தமிழ்நாட்டிற்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து தலைவர்களுடன் பரிசீலித்து வருகிறோம். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகத் துணிச்சலாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் தேர்தல் அறிக்கை என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு, அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது எண்ணம். ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது, பணம் வாங்க கூடாது என்பதை மக்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.பாஜக கடந்த 5 ஆண்டுகளில் செய்தது என்ன என்று கேட்கும் பிரியங்கா காந்தி அதற்கு முன்பு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசார் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள பிரியங்கா காந்திக்கு போக போக புரியும். இவ்வாறு அவர் கூறினார்.