கன்னியாகுமரி:குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று நாகர்கோவில் வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா? அல்லது உதயநிதியா? என்று சொல்ல முடியாத நிலையில் திமுக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகளால் அபகரிப்பு செய்யப்பட்ட நில அபகரிப்பு குற்றங்களுக்காகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனி பிரிவை உருவாக்கினார். அந்த அளவிற்கு அவர்களது ஆட்சியில் அராஜகம் தலைவிரித்து ஆடியது.
மின்தடை, விவசாயிகள் பிரச்னை போன்ற பிரச்னைகளால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் தெரியும். இதனால் வரும் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பெண் பேச்சுரிமை பற்றி பேசும் திமுக கட்சியில் அவர்களது கட்சியின் பெண் நிர்வாகி பூங்கோதை ஆலடி அருணாவுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.