குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் கூட்டம், நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (செப்.,20) நடந்தது. கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவி உமாரதி ராஜன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், கன்னியாகுமரிக்கு வருகை தரும் பாஜக மாநிலத் தலைவர், எல்,முருகனுக்கு மாவட்ட எல்லையில் வழங்கப்படும் வரவேற்பில், வழக்கறிஞர்கள் அதிகப்படியான வாகனங்களில் சென்று வரவேற்க வேண்டும், படந்தாலுமூட்டில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க போலி மருத்துவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.