தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கட்டட திறப்பு விழாவில் பெயர் புறக்கணிப்பு: பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - புதிய கட்டட திறப்பு விழாவில் பெயர் புறக்கணிப்பு

நாகர்கோவிலில் புதிய கட்டட திறப்பு விழாவில் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By

Published : Dec 30, 2022, 9:10 PM IST

பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியின் இந்த ஆண்டின் (2022) இறுதி கவுன்சில் கூட்டம் திமுகவைச் சேர்ந்த மேயர் மகேஷ் தலைமையில் இன்று (டிச. 30) நடைபெற்றது. கூட்டத்தில், ஆணையர் ஆனந்த் மோகன், உள்ளீட்டு அதிகாரிகள், 52 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் தாய் மரணத்திற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கூட்டம் தொடங்கியதும் ஐந்தாவது வார்டு மதிமுக கவுன்சிலர் உதயகுமார் தன் வார்டில் உள்ள குறைகளை எடுத்து சொல்வதற்காக முயன்றார். திமுக கவுன்சிலர்கள் அவரை அவையில் பேசவிடாமல் தடுத்து நிறுத்தியதுடன் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பன்னிரண்டாவது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். கடந்த 23 ஆம் தேதி அவர் வார்டு பகுதியில் மத்திய நிதி குழு திட்டம் தேசிய நலவாழ்வு குழுமம் திட்டத்தின் படி 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு நகர நல்வாழ்வு பரிசோதனை மைய கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்த அரசு விழா நிகழ்ச்சியில் பாஜக கவுன்சிலர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கு மாமன்ற கூட்டத்தில் நியாயம் கேட்டார். இது அரசு நிகழ்ச்சி இதில் தாங்கள் பதில் சொல்ல முடியாது என மேயர் தெளிவாக கூறினார்.

இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்பு பாஜக கவுன்சிலர்கள் 11 பேரும் அரசு விழாவில் அவமதிப்பு நடந்ததாக கூறி நியாயம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: விருமன் ஸ்டைலில் காதலியுடன் டூயட்: போலீசிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details