தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் 507 பேர் மீது வழக்குப்பதிவு! - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக

கன்னியாகுமரி: வேல் யாத்திரைக்குச் செல்ல தடைவிதித்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட 507 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக: 507 மீது வழக்குப்பதிவு!
குமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக: 507 மீது வழக்குப்பதிவு!

By

Published : Nov 7, 2020, 2:29 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, காவல் துறையினரைத் தள்ளிவிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கோஷமிட்டவாறு சென்றனர். இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட 507 பேர் மீது நேசமணி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வேல் யாத்திரை: தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உள்பட 700 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details