கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை பெய்து, அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாகி அதிகளவில் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கோதையாறு, தாமிரபரணி, பரழியாறு ஆற்றங்கரை பகுதிகளான மூவாற்றுமுகம், கடைவிளை, திக்குறிச்சி , குழித்துறை போன்ற பகுதிகளில் உள்ள செங்கல்சூளை மற்றும் உலர வைத்திருந்த செங்கற்கள் இந்த வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.
இதனால் சுமார் ஆறு கோடி மதிப்பிலான செங்கல்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணானது. சூளையில் எரிக்கப்பயன்படுத்தபடும் விறகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.