தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முடியும் அக்னி நட்சத்திரம்! மகிழ்ச்சியில் குமரி மக்கள்

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில்  மே 4ஆம் தேதி தொடங்கி அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்துவந்த நிலையில் நாளையுடன் முடிவடைகிறது.  இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

KNK

By

Published : May 28, 2019, 5:36 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதமே வெயில் வாட்டிவதைத்த நிலையில் மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்றைய தினம் முதல் இன்று வரை வெயிலின் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துவருகின்றனர்.

இந்நிலையில், குமரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலையில் இருந்தே வெப்பத்தின் ஆதிக்கம் தொடங்கிவிடுவதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்குகின்றனர். அதேபோல இரவு நேரத்திலும் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு வெப்பம் அதிக அளவு இருப்பதன் காரணமாக குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக இளநீர், நுங்கு, சர்பத், கூழ், மோர் போன்ற பானங்கள் அதிக அளவு விற்பனையாகிறது. அதே நேரத்தில் குமரியில் வாட்டிவதைத்த வெயிலில் இருந்து மக்களை காக்கும் விதமாக சில நாட்களாக குமரியில் மழை பெய்து வந்தது. எனினும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

நாளை முடியும் அக்னி நட்சத்திரம்

இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details