தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது! - சாத்தான்குளம் சம்பவம் வழக்கறிஞர்

குமரி: சாத்தான்குளம் சம்பவம், புதுக்கோட்டையில் ஏழு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இரு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக இந்தியாவில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ex central minister pon radhakrishnan  பொன் ராதாகிருஷ்ணன்  குமரி செய்திகள்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  சாத்தான்குளம் சம்பவம் வழக்கறிஞர்  சாத்தான்குளம் பொன். ராதா கிருஷ்ணன்
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது

By

Published : Jul 3, 2020, 10:39 PM IST

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதவாது, "தமிழ்நாடு அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. அதனைக் கடைபிடித்தால் கரோனா பிரச்னையிலிருந்து மீள முடியும். அனைத்து தரப்பினரும் கரோனா விஷயத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

சாத்தான்குளம் சம்பவத்தில் வியாபாரிகளை காவல் நிலையத்தில் வைத்து இரவு 2 மணி வரை காவலர்கள் தாக்கியுள்ளனர். கரோனா ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் காவல்துறைத் தலைவர் முதல் அடிமட்ட காவலர்வரை வீதிகளில் நின்று பணியாற்றினர். இதன்மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை காவலர்கள் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால், அந்தப் பெயருக்கு கரும்புள்ளி வைத்தது போல் சாத்தான்குளம் சம்பவம் உள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது- பொன். ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் காவல் நிலையம் ஒரு தாதாவின் அலுவலகமாக செயல்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காவல் துறையின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் சாத்தான்குளம் காவல்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீளும் முன்னே 7 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். இந்த இரண்டு சம்பவத்திலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக இந்தியாவிலுள்ள எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என வேண்டுகொள் விடுக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ABOUT THE AUTHOR

...view details