கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நடிகை நமீதா குமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
கொட்டாரத்தில் தொடங்கிய தேர்தல் பரப்புரையில் நமீதா பேசியதாவது: 'பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர். அவர் இந்த கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரி, மார்த்தாண்டத்தில் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், 4 ஆயிரம் கோடி மதிப்பில் இரட்டை ரயில் பாதைத்திட்டம் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அவர் இன்னொரு காமராஜர்.
அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தளவாய்சுந்தரத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் தாமரை மலர்ந்தால் தமிழ்நாடு வளரும்' எனக் கூறினார்.
'பொன்.ராதாகிருஷ்ணன் இன்னொரு காமராஜர்' - நமீதா - பாஜக
குமரி: சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து நமீதா தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
நடிகை நமீதா தேர்தல் பரப்புரை
இதையும் படிங்க:ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு