தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களியக்காவிளை, குட்கா கடத்திய திமுக பிரமுகர் உள்பட நால்வர் கைது! - புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே டிராவல்ஸ் மூலம் குட்கா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள் உள்பட நால்வரை காவலர்கள் கைதுசெய்தனர்.

A ton of tobacco smuggled by Travels - Four arrested!
A ton of tobacco smuggled by Travels - Four arrested!

By

Published : Oct 8, 2020, 10:51 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் அன்வர். இவரது வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்களை பதுக்கி, கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அன்வர் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது 1000 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அன்வரை கைது செய்தனர். மேலுல் இதில் அன்வருடன் இணைந்து செயல்பட்ட குமார், ஷாஜகான் உள்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details