கன்னியாகுமரி:இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை நினைவு கூறும் புனித வெள்ளி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 29 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது.
மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வைக் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவ சபைகளும் பாஸ்கா விழாவை நினைவு கூறும் விதமாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைக்கு ஆளான போதும் தனக்குத் தண்டனை கொடுத்த அவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார்.
இறைவா இவர்கள் செய்வது என்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என வேண்டிக் கொண்டார். இந்த இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது ஆனால் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் இயேசு பிரானை சிலுவையில் அரைந்தனர். சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசு அன்றிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் தினமான நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது 40 நாட்கள் தவக்காலத்தில் கடைசி வாரம் புனித வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.