தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி உண்ணாநிலை - கன்னியாகுமரியில் தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றாக்க வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்

கன்னியாகுமரி: ஏழு உள்பிரிவுகளைக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாகர்கோவிலில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

hunger-strike
hunger-strike

By

Published : Mar 13, 2020, 2:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில், ஏழு உள்பிரிவுகளைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வர பாண்டியன் கூறுகையில், "உழவுத் தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் கீழ் சாதியாகவும், பட்டியலினத்தவராகவும் கருதப்படுகின்றனர். விவசாயத் தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட மக்களைக் கீழ் சாதி மக்கள் என எப்படி சொல்ல முடியும்.

hunger-strike
உயர்வான குலத்தொழிலைக் கொண்டவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள். இவர்கள் பட்டியலினத்தவர்கள் அல்ல என உரக்கச் சொல்வோம். நம் இனத்தின் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களின் ஏழு உள்பிரிவுகள் அனைத்தையும் தேவேந்திரகுல வேளாளர்கள் என ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details