தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடப்புத்தகம் கொண்டு செல்லாததால் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியர் சஸ்பெண்ட்! - 9th class student issue

கன்னியாகுமரியில் பாடப்புத்தகம் கொண்டு செல்லாத காரணத்தால், 9ஆம் வகுப்பு மாணவனை பிரம்பால் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாடப்புத்தகம் கொண்டு செல்லாததால் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியர் பணியிடை நீக்கம்!
பாடப்புத்தகம் கொண்டு செல்லாததால் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியர் பணியிடை நீக்கம்!

By

Published : Jul 19, 2022, 5:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே உள்ள சூரங்குடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் பாடப்புத்தகம் கொண்டு செல்லவில்லை எனக் கூறி, கணித ஆசிரியர் மோகன் என்பவர் மாணவனை பிரம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனால் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்குச்சென்ற மாணவன் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அப்போது, மாணவனின் உடலில் காயமடைந்த பகுதிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பெற்றோர் பதிவிட்டுள்ளனர். மேலும் ஈத்தாமொழி காவல் நிலையத்திலும் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ, அதிவேகமாகப் பரவியது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவின் பேரில், கணித ஆசிரியர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எழுதியதாக வைரலாகும் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details