கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், ஆரம்பத்தில் கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது. அப்போது தமிழ் பேசும் மக்களின் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இதனால் கடந்த, 1948ஆம் ஆண்டு கேரளாவோடு இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும், தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம் வெடித்தது.
போரட்டத்தை அடக்க கேரள அரசு தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. மக்களின் தீவிர போராட்டத்தின் விளைவாக, கடந்த 1956ஆம் ஆண்டு கன்னியாகுமரி, தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.