கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரைச் சேர்ந்தவர் சரோஜா (50). இவர் தோப்பில் உள்ள தேங்காய் எடுத்து வருவதற்காக நெடுவிளைப் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றின் அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, சரோஜா தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
கிணற்றில் தத்தளித்த பெண் - போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்! - old lady
நாகர்கோவில்: நெடுவிளை பகுதியில் தேங்காய் எடுப்பதற்காகச் சென்றபோது 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்மணியை தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டனர்.
கிணற்றில் தத்தளித்த பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி சரோஜாவை கயிறு தொட்டில் மூலம் மீட்டனர்.
பின்னர் சரோஜாவை உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .