இது குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குமரி மாவட்டத்தில் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 விழுக்காடு மானியம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 45 அலகுகள் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற விரும்பும் பஞ்சாயத்துகளில் வசிக்கும் தொழில் முனைவோர், ஆயிரம் நாட்டுக்கோழிகளை 2,500 சதுர அடியில் தங்க வைக்கும் வசதி உடைய இடம்கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகளுக்கு விலையில் 50 விழுக்காடு, கோழி தீவனத்திற்கான விலையில் 50 விழுக்காடு, குஞ்சு பொரிப்பு கருவிக்கான விலையில் 50 விழுக்காடு என மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.