தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த தீயணைப்புத் துறை!

கன்னியாகுமரி: தென்தாமரைக்குளத்தில் வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் விஷப் பாம்பை கன்னியாகுமரி தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து சென்றனர்.

5 foot long glass viper snake caught by fire department
5 foot long glass viper snake caught by fire department

By

Published : Oct 25, 2020, 6:27 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பால் பண்ணை அருகே கோபித் துரை என்பவர் வீடு கட்டி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் அவர் நின்றிருந்தபோது பாம்பு ஒன்று சென்றுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபித்துரை, உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதற்குள் பாம்பு வீட்டின் பின்புறம் குவித்து வைத்திருந்த தென்னை மட்டைகளுக்குள் சென்று ஒளிந்துக்கொண்டது.

கோபித்துரை கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் வெங்கடசுப்பிரமணியம் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மட்டைகளுக்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த தீயணைப்புத் துறை

பின்னர் அதனை அரிசி சாக்குக்குள் வைத்து கொண்டு சென்றனர். இதுகுறித்து கூறும்போது, இந்த 5 அடி நீளமுள்ள பாம்பு கொடிய விஷப்பாம்பு வகையைச் சேர்ந்த கண்ணாடி விரியன். இந்த பாம்பு கடித்தால் கிட்னி மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்று கூறினர்.

இதையும் படிங்க:இடஒதுக்கீடு விவகாரம்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details