கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசின் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 380 ஏழை பெண்களுக்கு சுமார் 2800 கிராம் தங்கத்தை வழங்கினார்.
குமரியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 380 பேர் பயன் - தமிழ்நாடு அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 350 பேருக்கு சுமார் 2800 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
380 people benefit from gold for marriage scheme in kumari
இதுகுறித்து அவர் நிகழ்ச்சியில் பேசிய போது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஏழைப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.