கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தனியார் கலை கல்லூரி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டார் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குமரியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூவர் கைது! - kanyakumari ganja supply
கன்னியாகுமரி: நாகர்கோவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் ராபர்ட்சன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 இளைஞர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர்.
அதில், மூவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதயராஜ் (21), சதீஷ் (19), விக்னேஷ் (19) ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 250 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்செய்தனர்.