திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் (38). இவர் பல சரக்கு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி அமல்ராஜூவிடம் வியாபார ரீதியாக பேச வேண்டும் என குமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த பபி(31) என்பவர் அழைத்துள்ளார். இதனை நம்பி அமல்ராஜ் பபியை சந்தித்துள்ளார்.
வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளை - இளைஞர் கைது - kaniyakumari
கன்னியாகுமரி: நெல்லை வியாபாரியிடம் 16 லட்சம் பணம் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளை
அப்போது, அமல்ராஜின் காரில் வைத்திருந்த 16 லட்சம் ரூபாயை ராஜா என்பவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அமல் ராஜ் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தீவிர விசாரணை செய்து வந்த காவல்துறையினர், பாபியை இன்று (ஏப்ரல் 14) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு