தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் அலுவலகத்தில் 15 பவுன் நகை கொள்ளை! - kanniyakumari kovil theft

கன்னியாகுமரி: காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில் அலுவலகத்தில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டத்தை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 பவுன்  நகை கொள்ளை
15 பவுன் நகை கொள்ளை

By

Published : Oct 10, 2020, 7:18 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சாம்புறம் பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று(அக்.9) காலை கோயில் பூசாரி கோயிலை திறந்து வழக்கமான பூஜைகள் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் கோயில் வளாகத்தில் நகைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கற்கள் சிதறி கிடப்பதை கண்டு பூசாரியிடம் தெரிவித்துள்ளார். பின்னர், பூசாரி இதுகுறித்து கோவில் பொருளாளராக உள்ள பங்கராஜ் என்பவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அலுவலகத்தின் உள்ளே உள்ள தனி அறையும் உடைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், அந்த அறையில் உள்ள மரபீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகளை எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் அந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகள் அனைத்தும் அதிலேயே இருந்தது. திருட வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தங்க நகைகளில் பதிக்கப்பட்டிருந்த கற்களை மட்டும் கோவில் வளாகத்தில் சிதற விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் நித்திரவிளை காவல் துறையினருக்கு புகார் கொடுத்தனர். இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை காவல் துறையினர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

வீட்டில் சாராயம் காய்ச்சியவருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details