தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோவில் கைது! - kaniyakumari latest news

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kumari

By

Published : Nov 19, 2019, 3:22 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(55). இவர் சுசீந்திரம் பகுதியில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை சுசீந்திரம் பகுதியில் பேப்பர் போட்டுக்கொண்டிருக்கும் போது, பேப்பர் வாங்க வந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.

அனைத்து மகளிர் காவல்நிலையம்

சத்தம் கேட்டு, மாணவியின் பெற்றோர் வருவதற்குள் பாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, பாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details