மக்களவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு நிர்வாகமும், பல்வேறு அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்துள்ள திருப்பதிசாரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது பெற்றோர்களுக்கு அவசியம் வாக்களித்து 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதினர்.
100% வாக்குப்பதிவு: பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்து மாணவர்கள் கடிதம் - awareness rally
கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வலியுறுத்தி திருப்பதிசாரத்தில் ஊர்வலமாக சென்ற பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோர்களுக்கு 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினர்.
rally
இக்கடிதங்களை அங்குள்ள அஞ்சலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று தபால் பெட்டியில் போட்டனர்.