காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). அப்பகுதியில் முடி திருத்தம் கடை வைத்துள்ளார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் மதுபானம் அருந்த சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பவில்லை. பயந்துபோன குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, இளைஞரின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து, சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விவசாய கிணற்றில் இளைஞநர் உடல் - காவல் துறையினர் விசாரணை! - etv news
காஞ்சிபுரம்: காணாமல் போன இளைஞநர் கீழ்கதிர்பூர் கிராமத்திலுள்ள விவசாய கிணற்றிலிருந்து இறந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார்.
விவசாய கிணற்றிலிருந்து இளைஞநர் உடல்
தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றிலிருந்து இளைஞநரின் உடலை மீட்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ’கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மணிகண்டனின் உடல் என்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவின் பக்தை கைது!