தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது! - குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

காஞ்சிபுரம்: படப்பை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Apr 15, 2021, 9:56 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் வசித்துவருபவர் அமானுல்லா (25). இவர் மீது மணிமங்கலம், சோமங்கலம், ஒரகடம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, மணல் கடத்தல், கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது தொடர்பாக சிறையில் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்த அமானுல்லா ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இதனால், அமானுல்லாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்குப் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அமானுல்லாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடத்தனர்.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான நபர் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details