தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவி மீது காரை மோதிய குடிபோதை ஆசாமி, அதிர்ச்சி சிசிடிவி காட்சி! - கார் மோதி விபத்து

குடிபோதையில் கார் ஓட்டிய நபர், கல்லூரி மாணவி மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கார் விபத்து
கார் விபத்து

By

Published : Dec 5, 2020, 10:36 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக்கல்லூரியின் நுழைவு வாயிலில் தாறுமாறாக ஓட்டிவரப்பட்ட கார், அவ்வழியாக நடந்துச் சென்றுக்கொண்டிருந்த மாணவி மீது மோதி விபத்து ஏற்படுத்தி, அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் அந்நபரை விசாரணை செய்தனர். இதில் அந்நபர் குணசேகரன் என்பதும், குடிபோதையில் அவர் கார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மாணவி மீது மோதிய கார்


குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மனித வெடிகுண்டுக்கு சமம் என்று நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க:'டார்கெட்' குட்டி விமானத்தால் பெரிய பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details