தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் பெண் தற்கொலை - தங்கை கணவர் கைது - திருமணத்தை மீறிய உறவால் பெண் தற்கொலை

காஞ்சிபுரத்தில் தங்கை கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் தற்கொலை செய்வதற்கு முன் கணவருக்கு அனுப்பிய வீடியோ ஆதாரம் மூலம் தங்கையின் கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்
திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்

By

Published : Jul 22, 2021, 10:17 AM IST

காஞ்சிபுரம்: வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவர், பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி செண்பகவல்லி, 2 மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.

திருமணத்தை மீறிய உறவு

செண்பகவல்லியின் தங்கை லாவண்யாவிற்கும் ஜோசப் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்தின்போது மருத்துவமனையில் லாவண்யா இறந்தார்.

இதையடுத்து ஜோசப், குழந்தைகளுடன் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். அப்போது, ஜோசப்பிற்கும் செண்பகவல்லிற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

பெண் தற்கொலை

மேலும், ஜோசப்பிற்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் இருந்துள்ளது. இதனையறிந்த செண்பகவல்லிக்கும் ஜோசப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 21) பகல் 12 மணியளவில் செண்பகவல்லிக்கும், ஜோசப்பிற்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்த செண்பகவல்லி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை தனது கணவர் பொன்னுரங்கத்திற்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோ ஆதாரம்

இது குறித்து தகவலறிந்த சோமங்கலம் காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட செண்பகவல்லியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செண்பகவள்ளியின் வீடியோ பதிவில், தனது தற்கொலைக்கு ஜோசப் தான் காரணம் என்றும், தன்னை அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்

கைது

இதனை அடிப்படையாக கொண்டு சோமங்கலம் காவல் துறையினர் ஜோசப்பை, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நேற்று (ஜூலை 21) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details