தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் - kanchipuram latest news

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்
கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்

By

Published : Apr 7, 2021, 4:40 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் நேற்று (ஏப்.6) காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் திரும்பப் பெற்று, வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்ட காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரிக்கு எடுத்துச் சென்று சரிபார்த்து பின் அந்தந்த தொகுதிக்கான பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்.07) அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும், காஞ்சிபுரம் மாவட்ட பொதுத் தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புப் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை’ - சுகாதாரத் துறை

ABOUT THE AUTHOR

...view details