2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு ஏதுவாக வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இரண்டாம் கட்டமாக இன்றும்(டிச.12), நாளையும்(டிச.13) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு கா.மு.சுப்பராய முதலியார் பள்ளி, எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் சரிபார்ப்பு சிறப்பு முகாமை திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் இன்று(டிச.12) ஆய்வு மேற்கொண்டார்.